Thursday, December 26, 2024
HomeLatest Newsதென்னிந்திய சினிமாவின் முக்கிய பிரபலம் இலங்கைக்கு விஜயம்!

தென்னிந்திய சினிமாவின் முக்கிய பிரபலம் இலங்கைக்கு விஜயம்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய சினிமாவின் பிரபலமான வில்லன் என அழைக்கப்படும் ஆஷிஷ் வித்யார்த்தி இலங்கை சுற்றுலா துறையை வளர்ச்சி செய்யும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

ஆஷிஷ் வித்யார்த்தி  இலங்கையின் அழகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதன் பெருமைகளை உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

Lets Lanka என்ற பெயரில் இலங்கைக்கு பயணித்த அவர் சிகிரியா உள்ளிட்ட பிரபலமான சுற்றுலா இடங்களுக்கு பயணித்துள்ளார்.

அத்துடன் காணொளிகள் ஊடாக இலங்கையின் அழகை உலகுக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

சிறிய கடைகளில் உணவு உட்கொண்டு, பானங்கள் பெற்றுக் கொண்டுள்ளதுடன் தமிழ் ரசிகர்களுடன் செல்பியும் எடுத்துள்ளார்.

இலங்கைக்கு வாருங்கள் எனவும் இலங்கையின் அழகை வந்து ரசிக்குமாறும் அவர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடமும் சினிமா கலைஞர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தாம் இலங்கைக்கு வருவது இது இரண்டாவது தடவை எனவும், இந்த பயணத்திற்கு லெட்ஸ்லங்கா என பெயரிட்டுள்ளதாகவும் ஆஷிஷ் வித்யார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

Recent News