Wednesday, December 25, 2024
HomeLatest Newsசுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் உரையாற்ற சம்மதித்தார் ஜனாதிபதி!

சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் உரையாற்ற சம்மதித்தார் ஜனாதிபதி!

சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் தேசிய கீதம், தமிழில் உரை – சுரேன் ராகவனின் கோரிக்கைக்கு இணங்கிய ஜனாதிபதி

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கும் தமிழில் ஒருவர் உரையாற்றுவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது தமிழில் உரையாற்றுவதற்கான அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் விடுத்திருந்தார்.

நான் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுமானால்  தமிழில் உரையாற்றுவேன் என ஜனாதிபதியிடம் தெரிவித்தேன் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recent News