Wednesday, December 25, 2024
HomeLatest Newsமந்த நிலையின் விளிம்பை நோக்கி உலகப் பொருளாதாரம்! உலக வங்கி எச்சரிக்கை!

மந்த நிலையின் விளிம்பை நோக்கி உலகப் பொருளாதாரம்! உலக வங்கி எச்சரிக்கை!

விளிம்பை நோக்கி செல்லும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

2008ம் ஆண்டு மற்றும் கொவிட்-19 தொற்றுக்கு பின்னர் மூன்றாவது முறையாகவும் உலக பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்வதாக உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2023ல் உலக பொருளாதாரம் 1.7 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் 2.7 சதவீதமாகவும் காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

உலக பொருளாதார மந்தநிலை காரணமாக, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன் நெருக்கடியை போக்க சர்வதேச சமூகம் உதவிகளை வழங்க வேண்டும் என உலக வங்கி அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை, 2022 இல் 6.1% ஆக இருந்த தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி 2023 இல் 5.5% ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி நெருக்கடி மற்றும் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகள் காரணமாக இலங்கையின் உற்பத்தி 2022 இல் 9.2% குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதென உலக வங்கி தெரிவித்துள்ளது.

Recent News