Wednesday, December 25, 2024
HomeLatest Newsமனைவி விவாகரத்து கேட்டதால் 7 பேரை சுட்டு கொன்ற கணவன்!

மனைவி விவாகரத்து கேட்டதால் 7 பேரை சுட்டு கொன்ற கணவன்!

அமெரிக்காவில் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததால் விரக்தியடைந்த கணவர் தனது குழந்தைகள் 5 பேர், மனைவி மற்றும் மாமியார் என 7 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்.

உட்டா மாநிலத்தின் இனோச் நகரில், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

42 வயதான மைக்கல் ஹெய்ட் எனும் நபரே இவ்வாறு 7 பேரை சுட்டுக்கொன்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனது மனைவி, விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்ததையடுத்து, அந்நபர் இக்கொடூர செயலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மைக்கல் ஹெய்ட்டின் 40 வயதான மனைவி, 78 வயதான மாமியார், 17, 12, 7 வயதான 3 சிறுமிகள், 7, 4 வயதான இரு சிறுமிகள் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

Recent News