பச்சை தக்காளியில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தக்காளியை பொறுத்தவரை இவை இல்லாமல் எந்த சமையலும் இல்லை என்றே கூட சொல்லலாம்.
ருசிக்காக மட்டுமல்லாது ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் தக்காளியை குழம்பில் சேர்க்கப்படுகின்றன.
ஊட்டச்சத்துக்கள்
சிவப்பு தக்காளியைப் போலவே பச்சை தக்காளியும் சுவையாக இருக்கும். பச்சை தக்காளியில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கால்சியம், பொட்டாசியம், புரதம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
கண்பார்வை மேம்படுத்த
பச்சை தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும். பச்சை தக்காளி சட்னி அல்லது சாலட்டை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண்பார்வையை வலுப்படும்.
தோலுக்கு நன்மை பயக்கும்
பச்சை தக்காளி சருமத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. இது தோல் செல்களை மேம்படுத்த உதவுகிறது.பச்சை தக்காளியை பயன்படுத்துவதன் மூலம் சுருக்கங்கள் நீங்கி சருமம் அழகாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
பச்சை தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இதனை உண்பதால் சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வரும் அபாயம் நீங்கும்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
பச்சை தக்காளியை சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.
ரத்த உறைவை உண்டாக்கும்
பச்சை தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தம் உறைவதற்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் கே ரத்தம் உறைவதற்கு உதவுகிறது. நீங்கள் எங்காவது காயப்பட்டால், வைட்டமின் கே அங்கு இரத்தம் உறைந்து இரத்தப்போக்கு நிறுத்துகிறது.