Monday, May 6, 2024
HomeLatest News300 ஆண்டுகளாக வற்றாத கிணறு: வியக்க வைக்கும் பின்னணி

300 ஆண்டுகளாக வற்றாத கிணறு: வியக்க வைக்கும் பின்னணி

உலக அதிசயங்கள் என குறிப்பிட்டு கணக்கிட்டு வந்தாலும் நமக்கு தெரியாத சில விடயங்கள் இன்னும் நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கும்.

அந்த வகையில் வற்றாத கிணறு பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

கேரளாவில் வயநாடு பகுதியில் அமைந்திருக்கும் பாக்கம் கிராமத்தில் தான் இந்த வற்றாத கிணறு அமைந்துள்ளது.

இந்தக் கிணற்றின் பெயர் பாக்கம் திருமுகம் கேணி ஆகும். இந்தக் கிணறு சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

இந்தக் கிணறு வறட்சி ஏற்பட்ட காலங்களில் கூட வற்றாமல் இருந்துள்ளது. இந்த கிணறு இருக்கும் பகுதி அருகே குறும்பர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களின் கலாச்சாரத்தில் ஒரு பகுதியாகவே இந்த கிணறு மாறி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

ஒரு சமயத்தில் இந்த ஊரில் திருமணம் செய்து வரும் பெண்கள், இந்த கிணற்றில் ஒரு குடம் தண்ணீர் எடுத்து விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்பகுதி மக்கள் இந்தக் கிணற்றை தெய்வமாக கருதிகின்றார்கள். அதாவது கோவிலுக்குள் செல்லும் போது நாம் எவ்வாறு செருப்பைக் கழட்டி வைத்து விட்டு செல்கின்றோமோ அப்படித்தான் இந்த மக்கள் தண்ணீர் எடுக்கச் செல்லும் போது செருப்பைக் கழட்டி வைத்து விட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மேலும், இக்கிணற்றில் எத்தனை முறை தண்ணீர் எடுத்தாலும் தண்ணீர் வற்றவே வற்றாது என தெரிவித்திருக்கின்றனர்.வறட்சிகள் பல கடந்த போதிலும் அந்த கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Recent News