Monday, December 23, 2024
HomeLatest News13 வயதுச் சிறுமிக்கு மாமாவால் நடந்த கொடுமை!

13 வயதுச் சிறுமிக்கு மாமாவால் நடந்த கொடுமை!

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 13 வயதுடைய சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய உறவு முறையான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

தாய் இல்லாத நிலையில் தந்தை மற்றும் சகோதரனின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த சிறுமியின் மாமா குறித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பாடசாலை ஆசிரியரிடம் தகவலை தெரியப்படுத்தியுள்ளதை தொடர்ந்து பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் உதவியுடன் குறித்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பெண்கள் சிறுவர் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு குறித்த குடும்பஸ்தரை கைது செய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

Recent News