Tuesday, December 24, 2024
HomeLatest Newsவானிலிருந்து விழுந்த விசித்திர தீப்பந்து..! தொடரும் மர்மம்

வானிலிருந்து விழுந்த விசித்திர தீப்பந்து..! தொடரும் மர்மம்

சீனாவில் வானிலிருந்து எரிந்தவாறு விழுந்த ஒர் மர்மப்பொருள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவிலுள்ள Mengli என்னும் கிராமத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர், தான் வானிலிருந்து தீப்பந்து ஒன்று விழுந்ததைக் கண்டதாக கூறியுள்ளார்.

சீன சமூக ஊடகம் ஒன்றில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அவற்றில், அந்த மர்மப்பொருள் விழுந்த இடத்திலிருந்து செம்மஞ்சள் நிறத்தில் புகை எழுவதையும், உலோகத்துண்டுகள் சிதறிக்கிடப்பதையும் காண முடிகிறது.

இதற்கிடையில், வானிலிருந்து விழுந்தது விமானம் ஒன்றாக இருக்கலாம் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

அப்படி விழுந்தது விமானமாக இருந்தால், அந்தப் பகுதியில் வாழும் மக்களுடைய நிலைமை என்ன என சிலர் தங்கள் கவலையை வெளிப்படுத்த, அந்தத் தீ கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், மனிதர்களுக்கோ, வீடுகளுக்கோ எந்த சேதமும் இல்லை என்றும் Longlin பகுதி தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், வானிலிருந்து விழுந்தது என்ன பொருள் என்பது குறித்த மர்மம் நீடிக்கிறது.

Recent News