Friday, November 22, 2024
HomeLatest Newsஇனி ‘இந்த’ போன்களின் WhatsApp வேலை செய்யாது!

இனி ‘இந்த’ போன்களின் WhatsApp வேலை செய்யாது!

பிரபல மெசன்ஞ்சர் நிறுவனமான வாட்ஸ் அப் கொடுக்கும் அப்டேட்கள் பல பழைய மாடல்களில் வேலை செய்யவில்லை என யூசர்கள் புகார் அளிக்கும் நிலையில், டிசம்பர் 31 முதல் 49 போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபோன் 5, சாம்சங் கேலக்ஸி 3 உள்ளிட்டவையும் அடங்கும்.

பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போல தற்போது உலகம் முழுவதும் அதிகம் பேர் பயன்படுத்தும் செயல்களில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது.

உலக அளவில் பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

தகவல் பரிமாற்றத்தோடு நின்றுவிடாமல் தற்போது வீடியோ காலிங், போட்டோ வீடியோ பகிர்தல், வாய்ஸ் காலிங் வசதிகளையும் வாட்ஸ் அப் தனது பயனர்களுக்கு வழங்குகிறது.

வாட்ஸ் ஆப்

ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் வீடியோக்கள் புகைப்படங்கள் முக்கியமான தகவல்கள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக வாட்ஸ் அப் பாதுகாப்பு அம்சங்களில் மிகவும் கவனமாக செயல்பட்டு வரும் நிலையில் அடிக்கடி அப்டேட்டுகளும் விடப்பட்டு வருவதால் வாட்ஸ் அப் பாதுகாப்பானதாக இருக்கிறது. ஆனாலும் அதிலும் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன.

ஹேக்கர்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சித்ததாக வாட்ஸ் அப் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பயனாளர்களுக்கு சில அறிவுரைகளும் வழங்கப்பட்டது

இதனால் வாட்ஸ் அப் அடிக்கடி அப்டேட்களை அறிவித்து வருகிறது. ஆனாலும் சில போன்களின் அது அப்டேட் ஆகாததால் ஒட்டுமொத்த சிஸ்டமும் கெட்டுப் போகும் நிலை வருவதாகக் அந்நிறுவனம் தொடர்ந்து கூறி வருகிறது.

அப்டேட்

வாட்ஸ் அப் கொடுக்கும் அப்டேட்கள் பல பழைய மாடல்களில் வேலை செய்யவில்லை என யூசர்கள் புகார் அளிக்கும் நிலையில், டிசம்பர் 31 முதல் 49 போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபோன் 5, சாம்சங் கேலக்ஸி 3 உள்ளிட்டவையும் அடங்கும் என கூறப்படுகிறது. அதன்படி ஐஓஎஸ் 10, ஐஓஎஸ் 11, ஐபோன்5சி மற்றும் ஐபோன்5 ஆகிய சாதனங்களில் வாட்ஸ்அப்பின் சில அம்சங்கள் வேலை செய்யாமல் போகும்.

வேலை செய்யாது.

அதே நேரத்தில் வாட்ஸ்அப்பின் எந்த அம்சங்கள் வேலை செய்யாமல் போகும் என்பது குறித்தும் இதுவரை சரியான தகவல் வெளியாகவில்லை.

ரியாக்ஷன்ஸ் அல்லது பேமென்ட் செய்யும் வசதி இதில் ஒன்று வேலை செய்யாமல் போகலாம் என்று தெரிகிறது. இனி வரும் மாதங்களில் ஐஓஎஸ் 10, ஐஓஎஸ் 11, ஐபோன்5சி மற்றும் ஐபோன்5 ஆகிய போன்களுக்கு அளித்துவரும் ஆதரவை வாட்ஸ்அப் திரும்பப் பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்னென்ன மாடல்?

இந்த பட்டியலில் ஆப்பிள் 5 சீரிஸ், சாம்சங் கேலக்ஸி 3 ஆகிய முக்கிய போன்கள் இதில் அடங்கும். எல், லெனோவோ, ஹுவாவேய் உள்ளிட்ட 49 போன்களில் வாட்ஸ் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இயங்காது. மேலே குறிப்பிட்டுள்ள மாடல் ஐபோன்களில் இந்த ஆண்டு வரும் டிசம்பர் 31ஆம் தேதி முதல் செயல்படாது என்று வாட்ஸ்அப் டிராக்கர் தகவல்படி தெரியவந்துள்ளது.

வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை வெளியிட்ட பிறகு, மேலே குறிப்பிட்டுள்ள ஐபோன்களில் வாட்ஸ்அப்பின் அனைத்து அம்சங்களும் வேலை செய்யாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News