Wednesday, December 25, 2024
HomeLatest Newsஇரட்டைக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்- விக்கி! வைரலாகும் புகைப்படம்

இரட்டைக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்- விக்கி! வைரலாகும் புகைப்படம்

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்களது இரட்டைக் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா போல உடையணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.

நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9ம் திகதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து இருவரும் கடந்த அப்டோபர் 6ஆம் திகதி வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைப் பெற்றுடுத்தனர்.

நேற்று கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவரும் தங்களது இரட்டைக்குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா போல ஆடை அணிந்து கிறிஸ்மஸ் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்களுக்கு அதிக வாழ்த்துக்களும் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும், விக்னேஷ் சிவன் இணையத்தில் பதிவிட்டுள்ளதாவது, “மிகுதியான அன்புகள்! கனவுகள் ஈடேறும் வாழ்க்கையை வாழ்வதற்கு அனைவருக்கும் எல்லா மகிழ்ச்சியையும் ஆசீர்வாதங்களையும் தரவேண்டும் என கடவுளிடம் பிரார்த்திக்கிறோம்!” என கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளார்.

Recent News