Thursday, January 23, 2025
HomeLatest Newsஆர்ஜென்டினா நாணயத்தில் இடம்பிடித்த மெஸ்ஸி?

ஆர்ஜென்டினா நாணயத்தில் இடம்பிடித்த மெஸ்ஸி?

36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கிண்ண காற்பந்து தொடரில் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டினா அணித் தலைவர் மெஸ்ஸியின் புகைப்படத்தை, அந்நாட்டு நாணயத்தாளில் (ஆர்ஜென்டின் பெசோ) வெளியிட ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உலகக்கிண்ண காற்பந்து தொடரில் 36 ஆண்டுகளுக்கு பின் சம்பியன் கிண்ணம் வென்ற உற்சாகத்தில் ஆர்ஜென்டினா உள்ளது. இதற்கு முன்னர் அந்த அணி 1978இல் அந்த அணி கிண்ணத்தை வென்றிருந்தது.

இதனால், ஆர்ஜென்டினா உற்சாகத்தில் மிதக்கிறது. கிண்ணத்துடன் தாயகம் திரும்பிய அணித்தலைவர் மெஸ்ஸி, ஏஞ்சல் டி மரியா உள்ளிட்டோரை காண இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டனர். வீரர்கள் திறந்தவெளி பஸ்ஸில் ஊர்வலமாக வந்தனர்.

இந்நிலையில், உலகக்கிண்ணத்தை பெற்றுத்தந்த அணித்தலைவர் மெஸ்ஸியை கௌரவிக்கும் வகையில், ஆர்ஜென்டினா நாணயத்தாள்களில் அவரது படத்தை அச்சிட அந்நாட்டு ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பாக அந்நாட்டு நாளிதழ்கள் வெளியிட்ட செய்தியில், ஆர்ஜென்டினா பணமதிப்பின்படி 1,000 பெசோ நாணயத்தாளில் படத்துடன், 1,000 என்பதை ‘IO’ என அச்சடிக்கவும், பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி (Lionel Scaloni)யை கௌரவிக்க, கரன்சியில், அவரது பெயரை குறிக்கும் “La Scaloneta” என்ற வார்த்தையை அச்சிடுவது குறித்தும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recent News