Thursday, January 23, 2025
HomeLatest Newsகால்பந்து உலகக் கோப்பையின் போது அர்ஜென்டினா ரசிகை செய்த மோசமான செயல்!

கால்பந்து உலகக் கோப்பையின் போது அர்ஜென்டினா ரசிகை செய்த மோசமான செயல்!

கத்தாரில் இடம்பெற்ற ஃபிஃபா கால்பந்தாட்ட உலகக் கிண்ண இறுதிப் போட்டியின்போது அர்ஜென்டினாவின் வெற்றியை கொண்டாடிய அந்நாட்டு ரசிகை ஒருவர் திடீரென மேலாடையை கழற்றி சுழற்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் நாட்டு சட்டத்திட்டங்களின் படி பொதுவெளியில் எவரேனும் தங்கள் உடலை நிர்வாணமாக வெளிப்படுத்தினால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

கத்தாரில் கால்பந்து ரசிகர், ரசிகைகளுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிகள் கடுமையான பின்பற்றப்பட்டன. தோளில் இருந்து முழங்கால் வரையில் மறைக்கும் வகையில் ஆடைகள் அணிய அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் மேலாடையை கழற்றி ஆடிய ரசிகையின் காணொளி வேகமாக பரவியதைத் தொடர்ந்து, கத்தார் சட்டப்படி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் அந்தப் பெண்ணைப் பற்றி விவாதம் நடந்து வருகிறது. அப்பெண்ணின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனப் பல தரப்பட்ட வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெற்றியை ஓவ்வொருவரும் ஒவ்வொரு விதத்திலும் கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வகையில் அந்த நாட்டு ரசிகை அதுபோன்ற செயலை செய்து இருக்கலாம் என பேச்சுபொருளாகி உள்ளது.

Recent News