Tuesday, December 24, 2024
HomeLatest Newsவிந்தணுவை ஊசி மூலம் செலுத்திய பெண் கர்ப்பம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்

விந்தணுவை ஊசி மூலம் செலுத்திய பெண் கர்ப்பம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்

இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கர்ப்பம் தரிக்க ஊசி மூலம் விந்தணுவை தன்னுள் செலுத்திக் கொண்டதோடு, இது தொடர்பாக பல வீடியோக்களையும் வெளியிட்டார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பம் தரித்தது குறித்து அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். 19 வயதில் தான் கர்ப்பமாக இருந்ததாகவும், விந்தணுவை உட்செலுத்த  ஊசியைப் பயன்படுத்தி கர்ப்பமானதாகவும் சிறுமி கூறுகிறார். தற்போது 23 வயதாகும் அவர் இப்போது பெண் குழந்தைக்கு தாயாக உள்ளார். மேலும் டிக்டோக் செயலியில் தாயாக இருந்த அனுபவங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார்.

மான்செஸ்டரைச் சேர்ந்த ஷானன் நசரோவிச், ஷானன் கர்ப்பம் அடைய விந்தணுவை ஊசியை பயன்படுத்தி செலுத்திக் கொண்டதாகக் கூறியதைக் கண்டு மக்கள் திகைத்தனர். ஷானன் இந்த செயல்முறையை ‘home insemination’ என்று அழைத்தார், மேலும் தனக்கு சம்மதமுள்ள விந்தணு தானம் செய்பவர் இருப்பதாக விளக்கினார்.

விந்தணுவைத் தரும் ஒரு நன்கொடையாளரைக் கண்டுபிடிப்பதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை என்றும், மூன்று மாதங்களுக்குள் அவரை கண்டுபிடித்து மருத்துவப் பதிவுகள் மூலம்  ஊசியைப் பயன்படுத்தி கர்ப்பம் அடைந்ததாகவும் ஷானன் வெளிப்படுத்தினார். ஷானன் தான் ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் தான் விந்தணு நன்கொடையாளரையும் ஊசியையும் பயன்படுத்தியதாக வெளிப்படுத்துகிறார்.

ஒரு வீடியோவில், ஷானன் கூறுகிறார், ‘கால்போல் ஊசி மூலம் கர்ப்பமாக ஆக முடியும் என்று மக்கள் இன்னும் நம்பவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக, அது வேலை செய்கிறது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது – அது எனது மகள் என அவர் அடித்துக் கூறுகிறார்.

ஷானன் கூறும் இந்த தகவலை பலர் இன்னும் நம்பவில்லை என்று தெரிகிறது. இது எப்படி வேலை செய்ய முடியும் என்று சிலர் குழப்பமடைந்தாலும், பலர் இது ஒரு ஸ்மார்ட்டான யோசனை என்று நம்புகிறார்கள்.

Recent News