Wednesday, December 25, 2024
HomeLatest Newsவெளிநாட்டவர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் சுவிஸ் நகரம்! ஆய்வில் தகவல்

வெளிநாட்டவர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் சுவிஸ் நகரம்! ஆய்வில் தகவல்

சுவிட்சர்லாந்திலேயே விலைவாசி அதிகமான நகரமாக இருந்தாலும், வெளிநாட்டவர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் நகரமாக உள்ளது சுவிஸ் நகரம் ஒன்று.

2022ஆம் ஆண்டில், ஏராளமான வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிச் நகரத்தை வந்தடைந்துள்ளார்கள்.

சுவிட்சர்லாந்திலேயே, ஏன் ஐரோப்பாவிலேயே விலைவாசி அதிகமான நகரமாக இருந்தாலும், வெளிநாட்டவர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் நகரமாக சூரிச் நகரம் உள்ளதாக முனிசிபல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

2022ஐப் பொருத்தவரை, முன்னெப்போதும் இல்லாத அளவில் 30,000 வெளிநாட்டவர்கள் சூரிச் நகரில் குடியமர்ந்திருக்கிறார்கள். இதற்கு முன் 2007ஆம் ஆண்டு 28,500 வெளிநாட்டவர்கள் சூரிச் நகரில் குடியமர்ந்ததுதான் அதிக எண்ணிக்கையாக இருந்தது.  

சூரிச் நகரத்துக்கு புதிதாக வந்தவர்களில் முக்கால்வாசிபேர் 40 வயதுக்கு கீழ் உள்ள இளம் வயதினர்.

அவர்களில் பெரும்பாலானோர் அதிகம் கற்றவர்கள், பட்டதாரிகள் அல்லது உயர் பல்கலைக் கல்வி கற்றவர்கள்.

கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், 12 சதவிகிதத்தினர் ஆங்கிலத்தை அன்றாட மொழியாக பயன்படுத்துபவர்கள் என்பதுதான்.

சூரிச் நகரம் சுவிட்சர்லாந்தின் பொருளாதார ஆற்றல் மையமாகத் திகழ்வதுடன், சர்வதேச தொழில் நிறுவனங்கள் பல சூரிச் நகரத்தில் அமைந்திருப்பதும், நல்ல ஊதியம் கிடைப்பதும் சூரிச் நகரம் வெளிநாட்டவர்களைக் கவர்ந்திழுப்பதற்கு காரணமாக கருதப்படுகிறது.  

Recent News