Thursday, April 10, 2025
HomeLatest Newsகனவு உடைந்து அழுத ரொனால்டோ! இதயத்தை உருக்கிய கண்ணீர் காட்சி

கனவு உடைந்து அழுத ரொனால்டோ! இதயத்தை உருக்கிய கண்ணீர் காட்சி

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தோல்வியடைந்து போர்ச்சுகல் வெளியேறியதை தாங்கி கொள்ள முடியாத அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுத காட்சியை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.

கால்பந்து உலகில் பல ஆண்டுகளாக தலைசிறந்த கால்பந்து வீரர்களாக திகழ்ந்து வருபவர்களில் ரொனால்டோவும் ஒருவர்.

கால்பந்தில் பல சாதனைகளை ரொனால்டோ படைத்து இருக்கிறார். ஒரு காலத்தில் சுமாரான அணியாக கருதப்பட்ட போர்ச்சுகலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் கிடைக்க காரணமே ரொனால்டோ என்று சொல்லலாம்.

லீக் சுற்றில் தென்கொரியாவிடம் போர்ச்சுகல் தோல்வியடைந்தது. பிறகு இறுதியாக இப்போட்டியில் 1-0 என்ற கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி ஆப்பிரிக்க நாடான மொராக்கோ முதல் முறையாக அறையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

Recent News