Friday, November 22, 2024
HomeLatest Newsசூரிய சக்தியில் இயங்கும் கார் நெதர்லாந்தில் அறிமுகம்!

சூரிய சக்தியில் இயங்கும் கார் நெதர்லாந்தில் அறிமுகம்!

நெதர்லாந்தின் லைட் இயர் கார் நிறுவனம் உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் காரை உருவாக்கி வருகிறது.

வழக்கமான மின்சார செடான் மாடல் கார் போல தோற்றமளிக்கும் லைட்இயர்- 0 என்ற இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 43 மைல் தூரம் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது.

முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், 388 மைல் தூரம் வரை பயணிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2 லட்சத்து 59 ஆயிரம் டாலர்கள் விலையில் இந்த கார் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 31 ஆயிரத்து 500 டாலர்கள் ஆரம்ப விலையில் மற்றொரு வாகனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த வாகனம் 2025-ம் ஆண்டுக்குள் உற்பத்திக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent News