அமெரிக்காவில் ஓரின மற்றும் லெஸ்பியன்கள் தெடர்பான சர்ச்சை நெடுங்காலமாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த போது இந்த விவகாரம் பல்வேறு விவதாங்களுக்கு உட்படுத்தப்பட்டது.
ஆனாலும் இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. அது போன்ற திருமணங்களுக்கு இதுவரை சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்கப்பெறவில்லை.
ஆனாலும், அதற்கான போராட்டங்களும் ஓய்ந்துவிடவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் செனட் சபையில் தன்பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.
61 வாக்குகள் மசோதாவை ஆதரித்து கிடைத்துள்ளது. 36 வாக்குகள் எதிர்ப்பாக கிடைத்துள்ளது.
அமெரிக்க திருமண சட்டத்தின் மேல் மரியாதை வைத்து அனைவருக்குமான உரிமையை பாதுகாக்கும் விளிம்பு நிலையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ‘யாரிடம் வைத்தாலும் அன்பு அன்பு தான்… தான் விரும்பும் யாரையும் திருமணம் செய்து கொள்ளும் உரிமை அமெரிக்கர்களுக்கு இருக்க வேண்டும்’ என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக தன் பாலின திருமணத்திற்கும் சட்ட ரீதியான தடை வந்து விடுமோ என அச்சம் நிலவுகிறது.
இந்த நிலையில் செனட் சபையில் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மிகவும் பலம் வாய்ந்த அமைப்பான சிவில் உரிமைகளுக்கான சங்கம் இந்த மசோதாவை வரவேற்றுள்ளது.
மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான தாக்குதலுக்கு இந்த மசோதா முற்றுப்புள்ளி வைக்கும் என அந்த அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை காப்பாற்ற அனைத்து தரப்பினரும் இந்த மசோதாவிற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அமெரிக்க சிவில் உரிமைக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த மசோதாவிற்கு பரவலான ஆதரவு கிடைத்துள்ளதால், பெரும்பாலான அமெரிக்கர்கள் தன்பாலின திருமணத்தை ஆதரிக்கும் மனநிலையில் இருப்பது தெளிவாகியுள்ளது.
ஆனாலும், 36 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் மசோதாவிற்கு பின்னடைவு ஏற்படலாம் என்றும் கருதப்படுகிறது.