Monday, December 23, 2024
HomeLatest Newsராஷ்மிகாவுக்கு இப்படி ஒரு நிலையா? பதறும் ரசிகர்கள்!

ராஷ்மிகாவுக்கு இப்படி ஒரு நிலையா? பதறும் ரசிகர்கள்!

நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது நடிகர் விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படம் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இதனால் கோபமடைந்த கன்னட ரசிகர்கள் தன்னை வளர்த்து விட்ட கன்னட திரையுலகை மறந்துவிட்டு ராஷ்மிகா தற்போது தமிழ், இந்தியில் கவனம் செலுத்தி வருவதாக கூறி வருகின்றனர்.

மேலும், ராஷ்மிகா கன்னட திரையுலகில் நடிப்பதற்கு தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை கேள்வியுற்ற கன்னட ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இந்தநிலையில் ராஷ்மிகாவின் கைவசம் மிஷன் மஜ்னு, புஷ்பா – 2 போன்ற படங்கள் உள்ளன.
இதனிடையே, ராஷ்மிகா அண்மையில் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தனது முதல் படமான கிரிக் பார்ட்டி பற்றிப் பேசியிருந்தார். அப்போது படத்தை தயாரித்த ரக்‌ஷித் ஷெட்டியின் நிறுவனத்தின் பெயரை சொல்லாமல் தவிர்த்தார் என கூறப்படுகிறது.

Recent News