Monday, November 25, 2024
HomeLatest Newsமோசடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வாட்ஸ்அப்பில் உடனே இந்த அப்டேட்டை பண்ணிடுங்க!

மோசடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வாட்ஸ்அப்பில் உடனே இந்த அப்டேட்டை பண்ணிடுங்க!

வாட்ஸ் அப் மூலம் நடைபெறும் மோசடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், பாதுகாப்பான முறையில் வாட்ஸ் அப் பயன்படுத்தவும் சில வழிமுறைகள் உள்ளது.

புதிய மொபைல் அல்லது லேப்டாப்பில் வாட்ஸ் அப்பில் சாட் செய்யும்போது புதிய செக்யூரிட்டி கோட் உருவாக்கப்படும், செக்யூரிட்டி கோடில் மாற்றம் நிகழும்போது வாட்ஸ் அப் அதன் பயனர்களுக்கு அறிவிக்கும்.  டூ-ஸ்டெப்-வெரிஃபிகேஷன் செய்வதன் மூலம் மற்றவர்கள் யாரும் உங்கள் வாட்ஸ் அப் கணக்கை உங்களுக்கு தெரியாமல் பயன்படுத்த முடியாது.  

இதனை செய்ய மெனு-செட்டிங்ஸ்-> டூ-ஸ்டெப்-> வெரிஃபிகேஷன்->எனேபிள் ஆன் செய்ய வேண்டும்.  உங்கள் வாட்ஸ் அப் டேட்டா திருடப்படுவதை தடுக்க லேப்டாப்களில் வாட்ஸ் அப் வெப் பயன்படுத்தி வேலை செய்த பிறகு லாக் அவுட் செய்துவிட வேண்டும்.

Recent News