Sunday, May 5, 2024
HomeLatest Newsமுடக்கப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்பது எப்படி?

முடக்கப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்பது எப்படி?

பிரபலமான சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டால் அதனை மீட்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்.  

ஒருவரின் தினசரி வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டது சமூகவலைதளங்கள். அவை இல்லாமல் மனிதவாழ்க்கையின் ஒருநாள் முழுமையடையுமா? என்றால் இல்லலை என பளீச் என பதில் சொல்லிவிடலாம். குறிப்பாக, மக்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் ரீல்ஸ் மீது மோகம் அதிகரித்துள்ளது. ரீல்ஸூக்காக நேரம் செலவிடுபவர்களின் எண்ணிக்கை இன்றைய உலகில் அதிகமாகிவிட்டது. அப்படிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு ஏதோ ஒரு காரணத்தால் முடக்கப்பட்டால் அதனை மீட்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம். 

இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்

சமூக வழிகாட்டுகதல்களை முறையாக பின்பற்றப்படாத இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்படலாம். பாலியல் செயல்பாடு தொடர்பான வீடியோக்கள், கன்டென்டுகள், கிராபிக் வன்முறை, ஸ்பேம், துஷ்பிரயோகம், பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான போஸ்டுகளுக்காக தடை செய்யப்படலாம். உங்களின் லைக் மற்றும் பாலோ மூலம் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்படும். 

இன்ஸ்டாகிராம் மீட்பது எப்படி?

முடகப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்க, இன்ஸ்டாகிராம் ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ள வேண்டும்.அங்கு கொடுக்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து அப்பீல் செய்யலாம். அதில் மீண்டும் கிடைக்கவில்லை என்றால் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மறுசீரமைக்கப்படுவது குறித்த விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். இதுபோன்று பல வழிமுறைகள் முடகப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்பதற்கு உள்ளன. சரியான காரணத்தையும், அதற்கான படிவத்தையும் கொடுத்து விண்ணப்பிக்கும்பட்சத்தில் உங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மீண்டும் கிடைக்கும்.

Recent News