Wednesday, December 25, 2024
HomeLatest Newsதோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு?

தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம். இது தொடர்பில் தோட்ட நிர்வாகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டு ஒப்பந்தம் அமுலில் இல்லாமை இதற்கு தடையாக அமைந்துள்ளது. எனினும், இது சம்பந்தமாக தோட்ட நிர்வாகங்களுடன் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றோம்.”

இவ்வாறு பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை, சம்பள நிர்ணய சபை ஊடாக நாமே பெற்றுக்கொடுத்தோம். எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Recent News