Saturday, November 23, 2024
HomeLatest Newsஉலகின் முதல் நூலகம் எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா? அதிசயங்கள் நிறைந்த உண்மைகள்..!

உலகின் முதல் நூலகம் எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா? அதிசயங்கள் நிறைந்த உண்மைகள்..!

கி.மு. 300-ல் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் ஏழு லச்சதிற்க்கும் அதிகமான பாப்பிரஸ் தாள்களை கொண்ட முதல் பொது நூலகம் அமைக்கப்பட்டு The Royal Library of Alexandria என்று பெயரிடப்பட்டது.

இது பழங்காலத்தின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான நூலகமாக இருந்தது. 

இது கலைகளின் ஒன்பது தெய்வங்களான, முஸைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக வரலாறு சொல்கின்றது.  

இந்த நூலகம் மாசிடோனியாவின் தளபதியும் அலெக்சாந்தரின் வாரிசான முதலாம் தாலமி சோத்தர் என்பவரால் உருவாக்கப்பட்டது. 

 

பெரும்பாலான புத்தகங்கள் பாப்பிரஸ் காகித சுருள்களாக வைக்கப்பட்டிருந்தாக சொல்லப்படுகின்றது. 

இந்த நூலகத்தில் உள்ள நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிவுக்கு உள்ளாகியதாக கூறப்படுகின்றது. 

இதன் அழிவானது கலாச்சார அறிவு இழப்புக்கான ஒரு சின்னமாக மாறியது. இங்கிருந்த நூல்களின் தோராய எண்ணிக்கையானது 40,000 முதல் 400,000 வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

பிற செய்திகள்

Recent News