Thursday, November 14, 2024
HomeLatest Newsநட்டத்தில் விநியோகிக்கப்படும் எரிபொருள்..! - மீண்டும் விலை உயருமா?

நட்டத்தில் விநியோகிக்கப்படும் எரிபொருள்..! – மீண்டும் விலை உயருமா?

ஒரு லீற்றர் டீசல் 12 ரூபாய் நட்டத்திலேயே தற்போது விநியோகிக்கப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் ரீ.வி.சானக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றில் இதனை தெரிவித்தார்.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் மாற்றங்களை கொண்டுவருவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்னதாக அறிவித்திருந்தார்.

எனினும், விலைசூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் மாற்றங்களை கொண்டுவரப்படாமை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலையானது அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில் விலைசூத்திரத்திரத்தை பயன்படுத்தி விலை அதிகரிக்கப்படுகின்றது.

குறைவடைகின்ற சந்தர்ப்பத்தில் ஏன் மக்களுக்கு எரிபொருளை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் ஹேஷா விதானகே வினவினார்.

இதற்கு பதிலளித்த ரீ.வி. சானக்க, டீசல் ஒரு லீற்றர் 12 ரூபாய் நட்டத்திலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 22 ரூபாய் நட்டத்திலும் விநியோகிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் கடந்த வாரம் எரிபொருளுக்கான விலை குறையவில்லை, மாறாக அதிகரித்துள்ளது என்பதனை ஹேஷா வித்தானகே புரிந்துக்கொள்ள வேண்டும் என்றார்.

பிற செய்திகள்

Recent News