Friday, November 22, 2024
HomeLatest Newsஐபோன் 15ல் வரவிருக்கும் முக்கிய மாற்றம்! என்ன தெரியுமா ?

ஐபோன் 15ல் வரவிருக்கும் முக்கிய மாற்றம்! என்ன தெரியுமா ?

உலக நாடுகள் பலவற்றில் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்துடன் ராஜாவாக வலம்வந்து கொண்டிருக்கிறது ஐபோன்கள்.

ஐபோன் 14 சீரிஸ் கடந்த மாதம் வெளியான நிலையில், ஐபோன் 15க்காக பயனர்கள் காத்திருக்கின்றனர்.

இதில் என்ன புதுஅம்சம் வருமோ என பல புதுமையான தகவல்களும் இணையத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன.

USB-C
அந்த வகையில் ஐபோன்கள் வழமையான பயன்படுத்தும் Lightning portக்கு பதிலாக USB Type-C portயை பயன்படுத்தப்போவதாக தெரியவந்துள்ளது.

இதற்கு காரணம் ஐரோப்பிய ஒன்றியத்தில் கொண்டு வரப்பட்டுள்ள விதிமுறைகளே என கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்படி, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு 2024ம் ஆண்டுக்குள் USB Type-C portயை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இ- கழிவுகளின் எண்ணிக்கை பெருகாமல் இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பழைய அடாப்டர்கள் மற்றும் கேபிள்களால் இ-கழிவுகளில் அதிகமாவதால் USB Type-C portக்கு மாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

IPhoneல் மாற்றம் எப்போது?


குறித்த விதிகள் வலுவான ஆதரவை பெற்ற போதிலும், இன்னும் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை.

எனவே 2 ஆண்டு காலத்திற்கு ஆப்பிள் நிறுவனத்திற்கு காலக்கெடு உள்ளது, 2024 ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் போன்கள் அனைத்தும் USB Type-C portடுடன் வரவேண்டும் என்பதே விதிமுறையாகும்.

செப்டம்பரில் ஐபோன் சீரிஸ் அறிமுகமாகும் என்பதால், 2023ல் செப்டம்பரில் ஐபோன் 15 சீரிஸ் மற்றும் 2024 செப்டம்பரில் ஐபோன் 16 சீரிஸ் அறிமுகமாகும், USB Type-C portயை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனத்திற்கு சில காலம் ஆகும்.

சட்டப்பூர்வமாக 2025 செப்டம்பரில் வரும் ஐபோன் 17 சீரிஸில் USB Type-C port அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

ஒருவேளை Lightning portலில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 சீரிஸ் அறிமுகமானாலும், பழைய போன்களை விற்பனை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளிக்குமா? அதன் நிலை என்னவாகும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

USB Type-C portல் அறிமுகப்படுத்தப்பட்டால், எங்கு சென்றாலும் ஐபோன்களுக்காக கேபிள்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது, மற்றவர்களிடம் கேட்டுவாங்கிக்கூட சார்ஜ் செய்துகொள்ளும் பயனும் இருக்கிறது.

ஸ்மாட்ர்போன்களுக்கு மட்டுமா?

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த புதிய விதி, போன்களுக்கு மட்டுமல்லாது அனைத்து வகையான மின்சாதன பொருட்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

டேப்லட்கள், ஹெட்போன்கள், கீபோர்ட், மவுஸ் போன்றவற்றிற்கும் USB Type-C port விதிமுறை பொருந்தும், எனினும் 2026ம் ஆண்டு வரை இதற்கான கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Recent News