Thursday, December 26, 2024
HomeLatest Newsஅரசியலில் இருந்து ஓய்வுபெறும் மஹிந்த ராஜபக்ச! வெளியான பரபரப்புத் தகவல்

அரசியலில் இருந்து ஓய்வுபெறும் மஹிந்த ராஜபக்ச! வெளியான பரபரப்புத் தகவல்

“உடல் பலமும், மனவலிமையும் குறைந்துள்ளதை மஹிந்த ராஜபக்ச உணர்ந்து, மக்கள் நிராகரிக்க முன் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ராஜபக்சக்களின் அடிமையாக வாழ்ந்த வாழ்க்கையை விட்டொழிக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜபக்சவினர் இன்னும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர். அவ்வாறான நிலைமை ஏற்பட இடமளிக்காமல் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு.

ராஜபக்சவினர் தமது குடும்பத்தில் ஒருவரை மீண்டும் ஜனாதிபதியாக்க முயல்கின்றனர். இது மீண்டும் நாட்டை அழிப்பதற்கான முயற்சியாகும்.

எந்த மனிதருக்கும் எந்த வேலையும் செய்ய முடியாத காலம் வரும். எனவே, உடல் பலமும், மனவலிமையும் குறைந்துள்ளதை மஹிந்த ராஜபக்ச உணர்ந்து, மக்கள் நிராகரிக்க முன் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும். அதிகார மோகம் என்னிடம் இல்லை – என்றார்.

Recent News