Thursday, December 26, 2024
HomeLatest Newsவெளியே போனாலும்... பிக்பாஸ் வீட்டுக்குள் மாஸ் காட்டும் ஜிபி முத்து... வெளியான அடுத்த ப்ரோமோ..!

வெளியே போனாலும்… பிக்பாஸ் வீட்டுக்குள் மாஸ் காட்டும் ஜிபி முத்து… வெளியான அடுத்த ப்ரோமோ..!

இந்த சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்றைய தினம் முதல் போட்டியாளராக யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், யாரும் எதிர்ப்பாராத நிலையில் ஜிபி முத்து வெளியேறி இருக்கின்றார்.

அதாவது இவர் தான் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து டைட்டில் பட்டத்தை வெல்வார் என ஜிபி முத்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து வந்த நிலையில், இவர் திடீர் என வெளியேறி உள்ள சம்பவம் பிக்பாஸ் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இன்றைய தினத்திற்குரிய ப்ரோமோ ஆனது தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் விஷத்தன்மை கொண்டவர் யார் என கமல்ஹாசன் கேட்க, மைனா தனலட்சுமியையும், தனலட்சுமி அசீமையும் தேர்வு செய்கின்றார்கள். அதேபோன்று குறுக்கு புத்தி உள்ளவர் என்ற கேள்விக்கு மைனா மகேஸ்வரியை தேர்வு செய்கின்றார்.

அதனைத் தொடர்ந்து சிங்கம் போல் வீட்டைக் கட்டிக் காப்பவர் யார் என்ற கேள்விக்கு பதிலாக மைனா ஜிபி முத்துவை தேர்வு செய்கின்றார். மைனா அவ்வாறு ஜிபி முத்துவைக் கூறியதும் சுற்றி இருந்த பார்வையாளர்கள் அனைவரும் விசிலடித்து சந்தோசத்தில் கூச்சலிடுகின்றனர்.

இவ்வாறாக நம்ம ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் தற்போதும் போட்டியாளர்கள் மனங்களில் குறையாத மவுசோடு தான் வாழ்ந்து வருகின்றார்.

Recent News