மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாலை அல்லது இரவு நேரங்களில் தீவின் ஏனைய பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும்.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பதில் வளிமண்டலவியல் நிபுணர் ஸ்ரீமால் ஹேரத் தெரிவித்தார்.
காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடலிலும், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீராட வேண்டாம் எனவும், அவ்வாறு நீராட நேரிட்டால் மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.