கனடாவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களுக்கு கொரோனா காலத்தில் ஏற்பட்ட இடையூறுகளை சரிசெய்யும் விதமாக catch up payment தொகையைப் பெற்றுக் கொள்வதற்கு கனடா அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
ஒவ்வொரு மாணவரும் 200 முதல் 250 டாலர் வரை பெற்றுக்கொள்ள முடியும். 2022-2023ஆம் ஆண்டுகளிற்கான பாடசாலை உபகரணங்கள் கொள்வனவு செய்வதில் அல்லது கல்வி நிலைய கட்டணங்களிற்கு இந்த தொகை பயன்படுத்தப்பட முடியும்.
கிண்டர்கார்ட்டன் முதல் 12ஆம் வகுப்பு வரை 18 வயது வரை உள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் $200 பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.
விசேட தேவை உள்ள மாணவர்கள் கிண்டர்கார்ட்டன் முதல் 12ஆம் வகுப்பு வரை 21 வயது வரை உள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் $250 பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.
இந்த தொகையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
தொகையைப் பெற்றுக் கொள்வதற்கான தகுதி மற்றும் மேலதிக விபரங்களை தெரிந்து கொள்வதற்கும், விண்ணப்பிப்பதற்கும் www.ontario.ca/page/catch-up-payments எனும் வலைத்தளத்தை பயன்படுத்தவும். வலைத்தளம் description இல் குறிப்பிடப்பட்டுள்ளது.