Thursday, December 26, 2024
HomeLatest Newsபெண் போட்டியாளரை கட்டிப்பிடித்து தூக்கி அசல் செய்த செயல்... திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்..!

பெண் போட்டியாளரை கட்டிப்பிடித்து தூக்கி அசல் செய்த செயல்… திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை கடக்க உள்ளது. இதில் 20 போட்டியாளர்கள் முதலில் கலந்து கொண்ட நிலையில் 21 ஆவது போட்டியாளராக மைனா நந்தினியும் கலந்து கொண்டார்.

இப்போட்டியாளர்கள் அனைவரும் எந்தளவிற்கு ஒற்றுமையாக இருக்கின்றார்களோ அந்தளவிற்கு நாளுக்கு நாள் சண்டை, கோபம், அழுகை என உணர்ச்சிகளும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. அதுமட்டுமல்லாது இந்நிகழ்ச்சியில் சில முகம் சுளிக்கும் சம்பவங்களும் இடம்பெற்ற வண்ணம் தான் இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக பிக்பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்துகொள்ளும் விதம் பார்வையாளர்களை பெரிதும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

அதாவது மகேஸ்வரி, மைனா, ரச்சிதா, ஜனனி, நிவாஷினி, குயின்ஸி என தொடர்ந்து பல பெண்களிடம் அவர்களின் அனுமதியின்றியே மிகவும் மோசமான வகையில் நடந்துகொள்கிறார் அசல் கோளார்.

இதை பார்த்து வரும் பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களுடைய கடுமையான விமர்சனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு அசல் நடந்து கொண்ட விதமானது ரசிகர்களிடத்தில் பெரிதும் கோபத்தை தூண்டியுள்ளது. அதாவது நிவாஷியை பார்த்து “நீச்சல் குளத்தில் தூக்கி கொண்டு போட்டுவிடுவேன்” என்று அசல் கோலார் கூறியுள்ளார்.

இதற்கு உடனே நிவாஷினி “அது உன்னால் முடியாது” என்று கூற அவரை அப்படியே தூக்கி விட்டார் அசல் கோளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், அசல் கோளார் நடந்துகொள்ளும் விதம் சரியில்லை ரெட் கார்ட் கொடுத்து அனுப்புமாறு கூறி மறுபடியும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Recent News