Wednesday, December 25, 2024
HomeLatest Newsஉலகம் சுற்ற தயாராகும் மன்னர் சார்லஸ் குடும்பம்!

உலகம் சுற்ற தயாராகும் மன்னர் சார்லஸ் குடும்பம்!

பிரித்தானிய ராஜகுடும்பம் இதுவரை முன்னெடுத்திராத உலகம் சுற்றும் திட்டத்திற்கு மன்னர் சார்லஸ் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இரண்டு ஆண்டுகள் நீளும் இந்த உலகம் சுற்றும் பயணத்தில் முதற்கட்டமாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கரீபியன் தீவு நாடுகளிலும் செல்லவிருக்கிறார். குறித்த பயணங்களால் நட்பு பாராட்ட முயற்சிப்பதுடன், ஆதரவு திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணங்களில், சார்லஸ் மற்றும் கமிலா தம்பதிக்கு உதவியாக வேல்ஸ் இளவரசர் வில்லியம் குடும்பமும் இணையும் என்றே கூறப்படுகிறது. மேலும், மன்னர் சார்லஸ் மட்டும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் தனியாக பயணம் மேற்கொள்ளும் திட்டமும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் கமிலா ராணியார் தமது தனிப்பட்ட திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது. சார்லஸ் ஆட்சி காலத்தின் முதல் சில மாதங்கள் மற்றும் ஆண்டுகள், பொதுமக்களை நேரில் சந்திக்கும் வகையில் ராஜகுடும்பம் செயல்படும் என்றே தெரிவிக்கின்றனர்.

மேலும், சுற்றுப்பயணங்கள் தொடர்பில் தமது முதன்மை ஆலோசகர்களிடம் மன்னர் சார்லஸ் ஏற்கனவே கலந்தாலோசிக்க துவங்கியுள்ளதாகவும், அவுஸ்திரேலியா, கனடா மட்டுமின்றி அவரை மன்னராக ஏற்றுள்ள வேறு 14 நாடுகளுக்கும் சார்லஸ் பயணப்பட இருக்கிறார்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கும் மன்னர் சார்லஸ் பயணப்படலாம் அல்லது வில்லியம்- கேட் தம்பதியை அனுப்பி வைக்கப்படலாம் எனவும் கூறுகின்றனர். மேலும், பிரான்ஸ், ஜேர்மனி நாடுகளுக்கும் மன்னர் சார்லஸ் பயணப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.நவம்பர் மாதம் மன்னர் சார்லஸ்- கமிலா தம்பதி பிரான்ஸ் புறப்படுவதாக இருந்த நிலையில், தற்போது அடுத்த ஆண்டு பயணத்தை தள்ளி வைத்துள்ளனர். இதனிடையே, வில்லியம்- கேட் தம்பதி அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளனர்.

இந்த பயணத்தில் மேகன் மெர்க்கலை இளவரசி கேட் சந்திப்பார் எனவும், ஹரி- மேகன் குடும்பத்துடன் கேட்- வில்லியம் தம்பதி நேரம் செலவிடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

Recent News