எண்ணெய் கொள்வனவு நடவடிக்கைகளில் தற்போது பாகிஸ்தான், சவுதி அரேபியாவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக அறியப்படுகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருந்த அறிக்கையில் சவுதி அரேபியாவின் opec+ திட்டத்திற்கு சர்வதேச நாடுகளிடம் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் பாகிஸ்தான், சவுதி அரேபியாவிற்கு முழு ஆதரவையும் தெரிவிக்கின்றது என வெளியிடப்பட்டு இருந்தது. opec எனும் பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் ஒன்றியம் எண்ணெய் உற்பத்திகளை பெருமளவில் குறைப்பதற்கு தீர்மானம் எடுத்ததை தொடர்ந்து அமெரிக்காவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சு, சவுதி அரேபியாவுடன் தொடர்ந்து கூட்டுறவுகளை பேணுவது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யும் என குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் தற்போது தனது ஆதரவை அமெரிக்காவிற்கு எதிராக சவுதி அரேபியாவிற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.