இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் வறிய மக்கள் அன்றாடம் தமது வாழ்க்கையை கொண்டுசெல்வதில் கடும் சிரமங்களை எதிர்சோக்கி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இலங்கையில் மாதாந்தம் 5,000 ரஷ்ய பார்வையாளர்களை ஈர்க்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகே தெரிவித்துளள்hர்.
ரஷ்ய சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இலங்கை தூதரகம் ஏற்கனவே தொடர்ச்சியான விளம்பர பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஒன்றை தடுத்து வைக்குமாறு இலங்கை வர்த்தக நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அடுத்து ஜூன் 2ஆம் திகதி முதல் இலங்கைக்கான ஏரோஃப்ளோட்டின் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
அதன் பின்னர் கொழும்பு மற்றும் மொஸ்கோவிற்கு இடையில் ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.