நேபாளத் தலைநகர் காத்மாண்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (அக்டோபர் 19) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேபாளத் தலைநகர் காத்மாண்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (அக்டோபர் 19) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பலர் பாதுகாப்புக்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிந்துபால்சௌக் மாவட்டத்தில் நேபாள-சீனா எல்லைக்கு அருகில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அண்டை மாவட்டங்களில் மாலை 3:07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது
எனினும், இதனால் சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. கடந்த 2015ம் ஆண்டு, ஏப்ரல் 2015 மாதம் நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, கிட்டத்தட்ட 9,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 22,000 பேர் காயமடைந்தனர். இதனால், 800,000 வீடுகள் மற்றும் பள்ளிகள் சேதமாயின.
தற்போதைய நில நடுக்கம், பீகார், பாட்னா உள்ளிட்ட சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பாட்னா பிரிவு (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் கடந்த மாதத்தில் மொத்தம் 132 நிலநடுக்கங்களைப் பதிவு செய்துள்ளது. இதில் 35 இந்தியப் பகுதியில் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஏழு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.