Thursday, December 26, 2024
HomeLatest News6 பேருடன் காணாமல் போன கடற்படை படகு தொடர்பில் வெளியான தகவல்

6 பேருடன் காணாமல் போன கடற்படை படகு தொடர்பில் வெளியான தகவல்

6 பேருடன் காணாமல் போன கடற்படை படகு மீண்டும் தொடர்பாடலை ஏற்படுத்தியுள்ளதாக கடற்படை தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

செப்டம்பர் 17ஆம் தேதி கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான படகுகளை சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு பேருடனான குறித்த கடற்படை படகுடனான தொடர்பு கடந்த சுமார் ஒரு மாதங்களாக துண்டிக்கப்பட்டிருந்தது.

ஆறு பேரைக் கொண்ட இந்தக் கடற்படைக் குழுவினர் கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி தென் கடற்பரப்புக்குச் சென்றிருந்த நிலையில், 17ஆம் திகதி அவர்களின் தொடர்பாடல் துண்டிக்கப்பட்டமையினால் அவர்கள் காணாமல் போனதாக கடற்படை அறிவித்தது.

காணாமல் போன கடற்படையினர் தெற்கு கடற்படை கட்டளை பிரிவைச் சேர்ந்தவர்கள் என கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடற்படையினர் இதுவரை கடற்பகுதியில் தேடுதல் நடத்திய போதிலும், இந்தக் குழுவோ அல்லது படகோ கடந்த நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில், மீண்டும் குறித்த படகுடன் இன்று மீண்டும் தொடர்பாடலை ஏற்படுத்தியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவித்துள்ளன.

Recent News