Saturday, December 28, 2024
HomeLatest Newsஅமெரிக்காவை மட்டுமல்ல ஐரோப்பாவையும் 30 நிமிடங்களில் ரஷ்யா கைப்பற்றும்! 

அமெரிக்காவை மட்டுமல்ல ஐரோப்பாவையும் 30 நிமிடங்களில் ரஷ்யா கைப்பற்றும்! 

அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும், பில்லியனருமான எலான் மஸ்க் அண்மையில் அரசியல் விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது அமெரிக்காவை மாத்திரமல்ல ரஷ்யா நினைத்தால் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் சேர்த்தே 30 நிமிடங்களில் அணு ஆயுதத்தை பயன்படுத்தி கைப்பற்ற முடியும் எனும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார்.

எவ்வாறாயினும் இதே போன்ற அணு ஆயுதங்கள் அமெரிக்காவிடமும் உள்ளன எனவும் ஆனால் இதனை யாரும் சிந்தித்துச் செயற்படுவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயங்கள் டுவிட்டரில், தனிநபர் ஒருவருடனான உரையாடலின்போது எலான் மஸ்க் கூறியிருந்தார். இதற்கு முன்னர் ஏற்கனவே ரஷ்யா 2014ஆம் ஆண்டு உக்ரைன் இல் கைப்பற்றிய பிரதேசங்களை உக்கிரைன் அரசாங்கம் ரஷ்யாவிற்கு வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அத்தோடு தாய்வான் சீனா விவகாரத்தில் தலையிட்டு, தாய்வான் சீனாவின் விசேட ஆட்சி பிரிவாக மாற்றப்படுவது சிறந்தது எனும் கருத்தை முன்வைத்து தொடர்ந்து பலத்த எதிர்ப்பை சம்பாதித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Recent News