Thursday, December 26, 2024
HomeLatest Newsஇலங்கையில் அரியவகை எறும்புத்திண்ணி உயிருடன் மீட்பு

இலங்கையில் அரியவகை எறும்புத்திண்ணி உயிருடன் மீட்பு

புத்தளம் – கல்லடி கிவுல பகுதியில் நேற்று மாலை வீடொன்றின் முற்றத்தில் அரிய வகை உயிரினமான எறும்புத்திண்ணி ஒன்று வீட்டின் உரிமையாளரினால் பிடிக்கப்பட்டது.

எறும்புத்திண்ணியொன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு வனஜீவராசிகள் திணக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் சென்று அரியவகை உயிரினமான எறும்புத்திண்ணியை உயிருடன் மீட்டுள்ளனர்.

உயிருடன் மீட்கப்பட்ட எறும்புத்திண்ணி தப்போவ சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இவ் உயிரினமான எறும்புத்திண்ணி எதிரிகளைக் கண்டால் உடலை பந்து போன்று சுருட்டி வைத்துக் கொண்டு தம்மைக் காத்துக் கொள்ளும் குணமுடையவைையெனெ தெரிவித்தனர்.

இவ் உயிரினமானது இலங்கையில் அழிவடைந்து வருவதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Recent News