தீபாவளியை முன்னிட்டு மலையக பகுதிகளில் உள்ள மக்கள் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.
குறிப்பாக தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் எதிர்வரும் தீபாவளியை கடந்த காலங்களை போல் கொண்டாட முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக சகல பொருட்களும் வான் அளவில் உயர்ந்து கொண்டே சென்றது. தற்போது அரசாங்கத்தின் வரி விதிப்பால் மேலும் மேலும் விலை உயர்ந்த வண்ணம் உள்ளன.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் உயர வில்லை. எப்படியாயினும் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் மிக மிக அரிதாக உள்ளது. ஆயிரம் ரூபாய் வேதனம் வழங்க மறுக்கும் தோட்டங்கள் அதிகமாக உள்ளது.
15000/=முன்பணம் பெற்றாலும் புத்தாடை உடுத்த முடியாது. ஆடைகளின் விலையும் உயர்ந்துள்ளது. அரசாங்கம் கோதுமை மா 290/= ரூபாய் வீதம் விற்பனை செய்ய வேண்டும் என கூறிய போதும் நகரில் 450/= ரூபாய் வீதம் விற்பனை செய்வதை காண கூடியதாக உள்ளது. அதே போல் ஏனைய பொருட்கள் விலை பன்மடங்கு அதிகரித்தது.
இம் முறை மத்திய மலைநாட்டில் உள்ள இந்துக்கள் தீபாவளியை கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர். மத்திய மலை நாடு மட்டும் இன்றி சகல சைவ மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.