இலங்கை பெற்றுக்கொண்ட கடன் தொகையை பங்களாதேஷ் மீள அடைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை பங்களாதேஷிடம் பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது.
உரிய காலத்தில் இலங்கை கடனை திரும்பிச் செலுத்தும் என எதிர்பார்ப்பதாக பங்களாதேஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதிய ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் போது இலங்கை மற்றும் பங்களாதேஷ் மத்திய வங்கி ஆளுநர்கள் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் பின்னர் பங்களாதேஷ் மத்திய வங்கி ஆளுநர் அப்துர் ரவூப் தலுந்தர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றுக் கொண்ட கடனை உரிய காலத்தில் செலுத்த முடியாதுள்ளதால் இரண்டு தடவைகள் தவணை வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
200 மில்லியன் டொலர் கடன் தொகையை உரிய காலத்தில் செலுத்தி முடிப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்தார் என பங்களாதேஷ் மத்திய வங்கி ஆளுநர் தலுந்தர் தெரிவித்துள்ளார்.