Thursday, December 26, 2024
HomeLatest Newsஇலங்கை விஜயம் செய்யவுள்ள அமெரிக்க உயர்மட்ட ராஜதந்திரிகள்!

இலங்கை விஜயம் செய்யவுள்ள அமெரிக்க உயர்மட்ட ராஜதந்திரிகள்!

அமெரிக்க உயர்மட்ட ராஜதந்திரிகள் இலங்கைக்கு இந்த வாரத்தில் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான துணை ராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லுயு தலைமையிலான குழுவே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்களை அமெரிக்க ராஜதந்திரிகள் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் டொனால்ட் லுயு சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதத்திலும் இலங்கைக்கு முக்கிய அமெரிக்க ராஜதந்திரிகள் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News