Thursday, December 26, 2024
HomeLatest Newsஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்! ஜனாதிபதி பணிப்பு!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்! ஜனாதிபதி பணிப்பு!

கடும் மழையினால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பானம் உள்ளிட்ட சகல வசதிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி ஏற்கனவே திறைசேரி மூலம் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிவாரணம் வழங்க மாவட்ட செயலாளர்கள் சமர்ப்பிக்கும் மதிப்பீடுகளுக்கு திறைசேரியிலிருந்து நிதி விடுவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News