Thursday, December 26, 2024
HomeLatest Newsதங்க கடத்தலால் இலங்கைக்கு மாதம் 30 மில்லியன் டொலர்கள் இழப்பு

தங்க கடத்தலால் இலங்கைக்கு மாதம் 30 மில்லியன் டொலர்கள் இழப்பு

தங்கப் பொருட்களைக் கடத்தல் நோக்கத்துடன் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களினால் இலங்கைக்கு பாரிய நட்டம் ஏற்படுவதாக அரசாங்கம் கூறியுள்ளது.

குறிப்பாக இவர்களால் இலங்கைக்கு மாதாந்தம் 30 மில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இந்த கடத்தல்காரர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Recent News