யேமென் நாட்டில் பழுதடைந்த மருந்தை உட்கொண்ட காரணத்தால் 10 சிறுவர்கள் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Cancer நோயிற்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவர்களே காலாவதியாகியதால் பழுதடைந்த மாத்திரைகளை உட்கொண்டு மரணமடைந்துள்ளதாக குவைத் வைத்தியசாலை கூறியுள்ளது.
3 வயது முதல் 15 வயது வரையான சிறுவர்கள் 19 பேர் இந்த மருந்துகளை உட்க்கொண்ட நிலையில் 10பேர் இறந்துள்ளனர்.
ஒரு சிறுவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மருந்துகள் எப்போது காலாவதியாகியது, எப்போது சிறுவர்களிற்கு வழங்கப்பட்டது, எவ்வளவு நாட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது போன்ற விடயங்கள் எதுவும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
2014ஆம் ஆண்டு யேமெனில் போர் ஆரம்பமாகியதில் இருந்து அங்கு மருந்து போன்ற அடிப்படைத் தேவைப்பாடுகளிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.