Wednesday, May 8, 2024
HomeLatest Newsநாட்டில் மண்ணெண்ணெய்க்கு மீண்டும் தட்டுப்பாடு!

நாட்டில் மண்ணெண்ணெய்க்கு மீண்டும் தட்டுப்பாடு!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதன் காரணமாக நாட்டில் மண்ணெண்ணெய்க்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது. இதனால் மீண்டும் மோசமான பாதிப்பு உருவாகுமென பெற்றோலியக் கூட்டுத்தா பனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நாட்டில் ஒருநாளில் 450 முதல் 500 மெற்றிக் தொன் வரை மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது.

ஆனால், நாளொன்றுக்கு 50 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் மாத்திரமே சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை உருவாகியுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்தன.

Recent News