Thursday, December 26, 2024
HomeLatest Newsஅமெரிக்காவின் புதிய பாதுகாப்பு மூலோபாய அறிக்கை வெளியாகியது!

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு மூலோபாய அறிக்கை வெளியாகியது!

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலைமன் நேற்றைய தினம் அமெரிக்காவின்  புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாய திட்டத்தை முதல் பார்வை செய்துள்ளார். இதன்படி அமெரிக்காவின் பிரதான எதிரி நாடாக சீனா வரையறை செய்யப்பட்டுள்ளது.

மேலும் சீனா, சர்வதேச நாடுகளின் ஒழுங்கமைப்பில் மாற்றத்தை செய்வதற்கு முயற்சி எடுப்பதாகவும்,  இதனை அமெரிக்கா எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அத்தோடு சீனா மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை பொறுப்பு கூற செய்ய வேண்டும் என்பதும் இதில் உள்ளடக்கப்பட்டு இருந்தது. அமெரிக்க ஜனாதிபதியாக joe biden பதவியேற்று 22 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், நாற்பத்தி எட்டு பக்கங்கள் கொண்ட இந்த புதிய பாதுகாப்பு மூலோபாய திட்ட அறிக்கை வெளியாகி உள்ளது.

மேலும் இந்த அறிக்கையின் முதற்பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் கடிதம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி, உலகம் தற்போது மிக முக்கியமான ஒரு சுழற்சி புள்ளியில் இருப்பதாகவும்,  தற்போது அமெரிக்கா எடுக்கும் ஒவ்வொரு முடிவும் ஏனைய நாடுகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

Recent News