Wednesday, December 25, 2024
HomeLatest News36 அபாய வலயங்கள்; நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்! – சுகாதாரத்துறை எச்சரிக்கை

36 அபாய வலயங்கள்; நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்! – சுகாதாரத்துறை எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 60 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் வரையில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் 1,152 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அதன்படி, இதுவரை 59 ஆயிரத்து 317 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வருடம் குறித்த காலப்பகுதியில் 19 ஆயிரத்து 912 டெங்கு நோயாளர்களே பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதேவேளை கண்டி, காலி, யாழ்ப்பாணம், கேகாலை, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது நிலவும் டெங்கு பரவலைக் கருத்திற்கொண்டு 36 பிரிவுகளை அதிக அபாய வலயங்களாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Recent News