Thursday, December 26, 2024
HomeLatest Newsஉக்ரைனில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள்! 

உக்ரைனில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள்! 

உக்ரைனில் ரஷ்ய படைகள் கைப்பற்றி தற்போது உக்ரைன் வீரர்கள் மீளக் கைப்பற்றியுள்ள லைமன் பகுதியில் பெருந்தொகையான சடலங்களைக் கொண்டுள்ள புதைகுழி ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

பிரதேசத்திற்கான ஆளுநர் பாவ்லோ கிரிலிங்கோ குறிப்பிடும் போது, இதில் எத்தனை உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்பது இன்னமும் அறியப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த புதை குழியில் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு தரப்பினரதும் சடலங்கள் இருக்கலாம் என அறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கருத்து வழங்கியிருந்த மற்றுமொரு உயர் அதிகாரி, இதில் ஏறத்தாழ 180 சடலங்கள் உள்ளன எனவும், அதில் சிறுவர்களும் பெண்களும் உள்ளடங்குவார்கள் எனவும் கூறியுள்ளார்.

கடந்த வாரம் டொனேட்ஸ் பிரதேசத்தில் உள்ள லாய்மன் பகுதியில் ரஷ்ய படைகளை விரட்டி மீண்டும் பிரதேசத்தைக் கைப்பற்றியிருந்தது உக்ரைன்.

Recent News