Thursday, December 26, 2024
HomeLatest Newsஇலங்கை வரலாற்றில் முதல்தடவையாக முழுப் பொருளாதார அபிவிருத்தியும் வீழ்ச்சி!

இலங்கை வரலாற்றில் முதல்தடவையாக முழுப் பொருளாதார அபிவிருத்தியும் வீழ்ச்சி!

இலங்கை வரலாற்றில் முதலாவது தடவையாகத் தான் தற்போதைய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி 6 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திரத்திற்கு முன் இவ்வாறான நிலை எக்காரணத்திற்காகவும் ஏற்பட்டதில்லை. இதற்கு முதல் இரண்டு சந்தர்ப்பங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைவடைந்துள்ளது.

2002 இல் 1.4 வீதமும் 2021இல் கொரோனா தொற்றுக்காலத்தில் 3.6வீதமும் குறைந்து, இவற்றிற்கிணங்க இவ்வருடத்தில் முழுப் பொருளாதாரமும் வீழ்ந்துள்ளது. இது எல்லோரும் ஏற்றுக்கொண்ட உண்மையாகும்.

பணவீக்கம் விலை உயர்வினால் சாதாரணமாக அதிகரித்துள்ளது. வாழ்வது ஒரு போராட்டமாக மாறியுள்ளது. வட்டி வீதம் என்று மில்லாதவாறு அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் நீண்டகாலமாக அரச நிதியில் ஏற்பட்டுள்ள மற்றும் எம்மால் தீர்க்க முடியாத நெருக்கடியினால் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு இணங்க நிதிப் பயன்பாட்டை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் அனைவரும் தவறு செய்து, அரச நிதியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளோம்.

அதன் பிரதிபலனாக 2000ஆம் ஆண்டு நாட்டின் வரிப் பட்டியல், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ரூபா 90பில்லியன், அரசின் மொத்த வருமானம் ரூபா 211பில்லியன், சம்பளம் வழங்கியதன் பின்னர் இலாபத்தில் ஏனைய சகல விடயங்களுக்காக ரூபா 121பில்லியன் கிடைத்தது.

2010ஆம் ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ரூபா 471பில்லியன், அரசின் மொத்த வருமானம் ரூபா 817பில்லியன், சம்பளம் வழங்கியதன் பின்னர் ஏனைய சகல விடயங்களுக்காக ரூபா 333பில்லியன் இலாபத்தில் மீதமானது.

2020ஆம் ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ரூபா 1050பில்லியன், அரசின் மொத்த வருமானம் ரூபா 1367பில்லியன், சம்பளம் வழங்கியதன் பின்னர் ஏனைய சகல விடயங்களுக்காக ரூபா 317 மில்லியன் இலாபத்தில் மீதமானது.

இந்நிலை முக்கிய விடயமாக பாராளுமன்றத்தினால் அவதானிக்கப்பட வேண்டியுள்ளது. 2010இல் 12வருடங்களுக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட்டதன் பின்னர் அரச இலாபத்தில் ஏனைய விடயங்களுக்காக ரூபா 333பில்லியன் மீதமானது.

அதற்கு 10வருடங்களின் பின்னர் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கியதன் பின்னர் அதை விடக் குறைந்த தொகையான ரூபா 317 பில்லியன் கிடைக்கின்றது. இதனால் ஒவ்வொரு வருடமும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசொன்றை அவசியமான நிதியை அன்றாடம் நடத்திச் செல்வதற்கு எந்த அரசாங்கத்திற்கும் வழங்க முடியாது போயுள்ளது.

இலங்கை வரலாற்றில் எந்தக் கட்சி எந்த நபர் அரசாங்கம் நடத்தினாலும் ஒவ்வொரு வருடமும் போதிய வருமானம் கிடைப்பதில்லை. அதனால் ஒவ்வொரு வருடமும் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையொன்று ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்ய எந்தத் தலைவர் வந்தாலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களைப் பெறுகிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புடன் 20 விடயங்கள் தொடர்பாக முன்வைத்தார். தானும் பிரதமரும் அவற்றை நிதானமாக செவிமடுத்தோம். ஆனால் அதற்கு பதில் வழங்குவதற்கு நேரம் போதாமையால் அதனை எழுத்து மூலமாக தெளிவுகளை சிறிய புத்தகமாக வழங்குவதை கௌரவமாக எடுத்துக்கொள்கின்றோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.

Recent News