Friday, April 11, 2025
HomeLatest Newsகாலநிலை மாநாட்டில் பங்கேற்க எகிப்து பறக்கும் ஜனாதிபதி!

காலநிலை மாநாட்டில் பங்கேற்க எகிப்து பறக்கும் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் எகிப்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாலைதீவின் சபாநாயகருமான மொஹமட் நஷீட் மற்றும் நோர்வேயின் முன்னாள் சுற்றாடல் மற்றும் காலநிலை அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியின் சுற்றாடல் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவும் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Recent News