Saturday, December 28, 2024
HomeLatest Newsநாட்டைமீட்டெடுக்க அனைவரும் ஒண்றிணைவோம்- ஜனாதிபதி விசேட அழைப்பு!

நாட்டைமீட்டெடுக்க அனைவரும் ஒண்றிணைவோம்- ஜனாதிபதி விசேட அழைப்பு!

அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நான்கு கட்ட மூலோபாயத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி, முதல் கட்டம் வெற்றியடைந்துள்ளது எனவும், இரண்டாவது கட்டத்துக்கான அடித்தளம் தயாராகி வருகின்றது எனவும் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விசேட உரையொன்றை நிகழ்த்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Recent News