ரஷ்யா உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸிலேன்ஸ்கி உடன் நேற்றைய தினம் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார்.
இதன்போது சமாதானத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் இந்தியா உடன் இருந்து உதவிசெய்யும் என இந்திய பிரதமர் வாக்குறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய பிரதமர் குறிப்பிடும் போது, யுத்தம், எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு கொண்டு வரக் கூடியது அல்ல என வலியுறுத்தி உள்ளதோடு, அணுவாயுத கையாளுகைகள் தொடர்பாக இந்தியாவின் கரிசனை களையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இதேவேளை, ரஷ்யாவை எதிர்ப்பதற்கு உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை வழங்க உடன்பட்டுள்ளது அமெரிக்கா. $625m பெறுமதி அளவிற்கு வழங்கப்பட உள்ள ஆயுத உதவிகளில் பிரதானமாக ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளடக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.